வெள்ளி, 6 ஏப்ரல், 2012

மணக்கும் மனோரஞ்சிதம்….


[பட உதவி: கூகிள்]

மல்லிகைப் பூ என்றால் தினசரி பார்க்கலாம். மனோரஞ்சிதம் அப்படியில்லை.   பச்சை நிறத்தில், இலை போன்று தோற்றமளித்தாலும், மனதை சந்தோஷப்படுத்தும் மணம் கொண்டது மனோரஞ்சிதம்.  பூவை முகர்ந்து பார்த்தால், நாம் என்ன மணத்தினை மனதில் நினைக்கிறோமோ அதே மணத்தினைத் தரவல்லது மனோரஞ்சிதம் பூ. 

அதுபோலவே நம் மனதிற்குத் தான் எத்தனை சக்தி.  நினைத்த நேரத்தில் நினைத்த பொருளை மனக்கண்ணில் தெரிய வைக்கிறது மனது.  ”நேற்று ஒரு பூந்தோட்டத்திற்குச் சென்றோமே அங்கே எத்தனை எத்தனை மலர்கள், அவற்றின் அழகு, வசீகரம் ஆகியவற்றை நினைத்தால் மனதில் நமக்கு அதன் உருவம் தெரிகிறது.  இருந்தாலும் அவற்றை மீண்டும் கண் கொண்டு பார்க்கவேண்டுமானால் அப் பூந்தோட்டத்திற்குத் திரும்பச் செல்ல வேண்டும், அப்பூக்களை நீங்கள் புகைப்படம் எடுத்திராவிட்டால்!

உங்கள் வீட்டில் நிகழும் விழாக்கள் எல்லாவற்றிலும் புகைப்படங்கள் எடுத்து, அதை ஒரு அழகிய ஆல்பத்தில் போட்டு அவ்வப்போது எடுத்துப் பார்த்து அந்த நாளில் நடந்த நிகழ்வுகளை மனதுக்குள் நினைத்து ரசிக்க புகைப்படங்கள் தானே உங்களுக்கு உதவியாக இருக்கின்றன.  [பலர் கல்யாண ஆல்பம் பார்த்து மனதுக்குள் அழுவது வேறு விஷயம்! அதை எதுக்கு இங்கே நினைவு படுத்தணும்?]

புகைப்படங்கள் எடுப்பது எனக்கு பொழுதுபோக்கு. அவ்வப்போது பயணம் செல்லும்போது மறக்காமல் எடுத்து வைப்பது எனது டிஜிட்டல் காமிராவை – அப்போது தானே நிறைய புகைப்படங்களை எடுத்து அவற்றை வலை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள முடியும்.  நான் எடுத்த சில புகைப்படங்கள் கீழே.


ரோஜா... ரோஜா....  


ஜெய்விலாஸ் பேலஸ், குவாலியர்.


மருமகள் கோவில், குவாலியர்


நாங்களும் சர்க்கஸ் காட்டுவோமில்ல.... தில்லி விலங்கியல் பூங்கா 


பேடாகாட், ஜபல்பூர்

புகைப்படக்கலை என்பது மிகவும் செலவு வைக்கும் ஒரு விஷயம் என்பதால் முன்பெல்லாம் பலர் இதில் அவ்வளவாக விருப்பம் காட்டியதில்லை. இப்போது டிஜிட்டல் காமிராக்களால் அதிக தொடர் செலவு இல்லை என்பதால் நிறைய பேருக்கு இதில் ஆர்வம் ஏற்பட்டுள்ளது.

இன்று வலைச்சரத்தில் புகைப்படங்கள் பற்றிய வலைப்பூக்களை பார்க்கலாம்.  இன்றைய வலைச்சரத்தில் மனோரஞ்சிதம் மணம் வீசுகிறது.  நுகர்ந்து மகிழுங்கள்….

மீண்டும் நாளை சந்திப்போம் வேறொரு மலரோடு!

நட்புடன்

வெங்கட்
புது தில்லி.

30 கருத்துகள்:

  1. வசீகரிக்கும் மனோரஞ்சிதம்..
    பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்..

    பதிலளிநீக்கு
  2. @ இராஜராஜேஸ்வரி:

    தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  3. @ குணா தமிழ்: நுகர்ந்து மகிழ்ந்தீர்களா? மிக்க மகிழ்ச்சி முனைவரே.

    பதிலளிநீக்கு
  4. அழகழகா படங்கள் எடுத்திருக்கீங்க. நல்லாயிருக்கு. மனோரஞ்சித வாசனையோட வலைச்சரமும் அருமை. இரண்டையும் மிக ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
  5. பல வரிகளில் எழுதப் படும் கதைகளோ கவிதைகளோ
    விளக்க வேண்டியதை ஒரு ஓவியமோ ஃபோட்டோவோ
    விளக்கி விடும். அதை தருணம் தவறாமல் எடுக்க கூடியவர்கள் வல்லவர்களே.அவர்களை எடுத்துக் காட்டிய தங்களுக்கு பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  6. @ ராமலக்ஷ்மி: தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  7. @ கணேஷ்: தங்களது வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் மிக்க நன்றி நண்பரே....

    பதிலளிநீக்கு
  8. @ மோகன் குமார்: தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி மோகன்.

    பதிலளிநீக்கு
  9. @ ராஜி: //பல வரிகளில் எழுதப் படும் கதைகளோ கவிதைகளோ விளக்க வேண்டியதை ஒரு ஓவியமோ ஃபோட்டோவோ விளக்கி விடும். //

    உண்மை ராஜி.

    தங்களது வருகைக்கும் இனிய கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  10. manoranjitham!
    thanmaikaikal enakku theriyaathu!
    theriyapadithiythukku mikka nantri!

    பதிலளிநீக்கு
  11. வலைச்சரத்தில் மனோரஞ்சித மணம் அருமை.

    பதிலளிநீக்கு
  12. மணக்கும் மனோரஞ்சிதப் பூ மற்றும் போட்டோஸ் அருமை.

    பதிலளிநீக்கு
  13. @ சீனி: தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சீனி அவர்களே!

    பதிலளிநீக்கு
  14. @ கோமதி அரசு: தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றிம்மா....

    பதிலளிநீக்கு
  15. @ சே. குமார்: தங்களது இனிய வருகைக்கும் பதிவினை ரசித்து கருத்துரைத்தமைக்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  16. மனோரஞ்சிதம் என்ற பெயரே, ரம்மியமாக இருக்கிறது..

    பதிலளிநீக்கு
  17. @ பாரத்... பாரதி....: தங்களது வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் மிக்க நன்றி நண்பரே.

    பதிலளிநீக்கு
  18. @ ஆரண்ய நிவாஸ் ஆர். ராமமூர்த்தி: தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  19. வாழ்த்துகள்.
    தொடர்ந்து எழுதுங்கள்.

    மு.இளங்கோவன்
    புதுச்சேரி,இந்தியா

    பார்க்கவும்
    http://muelangovan.blogspot.in/

    பதிலளிநீக்கு
  20. புகைப்படங்கள் அருமை!
    காரஞ்சன்(சேஷ்)

    பதிலளிநீக்கு
  21. @ முனைவர் மு. இளங்கோவன்: தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி முனைவரே. உங்கள் பக்கத்திற்கும் வருகை புரிகிறேன்.

    பதிலளிநீக்கு
  22. @ காரஞ்சன் [சேஷ்]: வருகைக்கும் புகைப்படங்களை ரசித்து கருத்துரைத்தமைக்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  23. மனோரஞ்சிதம் பூவைப் பார்த்தே நட்கள் ஆகிறது.
    என் பதிவையும் அறிமுகப் படுத்தி இருக்கிறீர்கள். மிகவும் நன்றி வெங்கட்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி வல்லிம்மா.

      நீக்கு
  24. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் ரசித்தமைக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....