செவ்வாய், 31 அக்டோபர், 2017

ஒண்ணாம் நம்பர் கடைக்கு சீக்கிரம் போ கோபால்!




சமீபத்தில் தமிழகத்தில் இருந்தபோது சில பேருந்து பயணங்கள். பெரும்பாலான பயணங்களில் சக பயணிகளின் சம்பாஷணைகளை கவனிப்பது பழக்கமாக இருந்தது. [உடனே ”ராஜா காது கழுதை காது பகுதிக்கு மேட்டர் நிறைய தேத்திட்டீங்க போல” என்று கேட்டால் பதில் இல்லை என்பதாகத் தான் இருக்கும்! நகரப் பேருந்தில் பயணங்கள், அதுவும் கிராமப் புறப் பயணங்களில் நிறையவே அனுபவங்கள் கிடைக்கின்றன. திருப்பராய்த்துறைக்கு சில முறைகள் பயணித்த போது ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு அனுபவம். மக்கள் இப்போதெல்லாம் நிறையவே அரசியல் பேசுகிறார்கள். அப்படியே நிகழ்வுகளை நேரில் பார்த்த மாதிரியே விமர்சிக்கிறார்கள். அந்த அரசியல்வாதிக்கு இத்தனை கோடி சொத்து, இவனுக்கு அவளோடு தொடர்பு என பேச நிறைய விஷயங்கள், அதையும் பொது வெளியில் சத்தமாகவே பேசுகிறார்கள். The Right to Speech!


ஒரு தலைமுறையே குடிக்கு அடிமையாகிக் கிடப்பதைப் பார்க்க முடிந்தது. பலருக்கும் மூன்று வேளை உணவு உண்பது மாதிரி தினம் தினம் குடிப்பதும் அவசியமான ஒன்றாக மாறி இருக்கிறது. பெரும்பாலான மனிதர்களின் பேச்சு எங்கே தொடங்கினாலும், எங்கே முடிந்தாலும், குடிப்பது பற்றியே நிறைய பேசுகிறார்கள். திருப்பராய்த்துறையிலிருந்து சத்திரம் பேருந்து நோக்கிய ஒரு பயணத்தில் வழியில் இருவர் ஏறினார்கள். நண்பர்கள் போலும்! அதில் ஒருவரின் அலப்பறை தான் அதிகமாக இருந்தது. பேச்சு முழுக்க முழுக்க, சரக்கு அடிப்பதும், சரக்கின் சுவை பற்றியும், அவரது அனுபவங்கள், எந்தக் கடையில் சரக்கு நன்றாக இருக்கும் என்பது பற்றியுமே இருந்தது! வேறு விஷயமே பேச மாட்டாரா என்று நானும் உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருந்தேன்.

உடைசலான தேகம், இடுப்பில் நிற்காத லுங்கி, கைகளில் மருதாணி, நெற்றியில் ஒரு வீபூதிக் கீற்று, பனியன் போடாது போட்ட சட்டை, குளித்து விட்டு வந்தேன் என்று சொன்னாலும், பேசும்போது நேற்றைய சரக்கின் வீச்சம் என ஒரு மார்க்கமாகவே இருந்தார். நடுநடுவே லுங்கி கழன்று விட, “எந்த பஸ்ஸிலும் நாங்க கம்பியைப் பிடிக்க மாட்டோம்ல, நீ ஸ்டடியா இருக்கடா சூனா பானா” என்று கைலியைக் கட்ட ஒரு நடனம்! அந்த நடனத்தினை வார்த்தைகளில் விவரிக்க இயலவில்லை. காணொளியாக எடுத்துக் காண்பிக்க வேண்டும் – எதற்கு வம்பு என காட்சியைப் படம்பிடிக்கவில்லை! பேருந்தில் பயணித்த 30-40 நிமிடங்களில் நான்கு ஐந்து முறை இப்படி லுங்கியை கட்டிக் கொண்டார். 

பேருந்தில் இவர்கள் தினம் தினம் பயணிப்பவர்கள் போலும்! அதனால் பேருந்து நடத்துனர், ஓட்டுனர் என அனைவரையும் தெரிந்து வைத்திருந்தார்கள். பெயர் சொல்லி அழைக்கும் அளவிற்கு பழக்கம் போல! சரக்கு பற்றிய நினைவாகவே இருந்தார்கள் என்பதால், நடுநடுவே, “கோபால் ஒண்ணாம் நம்பர் கடைக்கு சீக்கிரமா போ கோபால்!” என்று நடத்துனரைப் பார்த்து குரல் கொடுத்தார்.  போகவேண்டியது இவர், ஆனால் நடத்துனரைப் போகச் சொல்லிக் கொண்டிருந்தார். அவர் பதிலே சொல்லாது குறுக்கும் நெடுக்குமாக பயணச் சீட்டு தந்தபடி நடந்து கொண்டிருந்தார். நடுநடுவே சரக்கு விற்பனை, டாஸ்மாக் கடைகளை ஏன் மூடக் கூடாது, சரக்கின் விலை ஏன் உயர்த்தக்கூடாது என விளக்கங்களும் கொடுத்தார்! தினம் தினம் அடிப்பது அவர் போன்ற குடிமக்கள் தானே, அவர்களுக்குத் தான் அதன் கஷ்டம் தெரியும்! அவர் சொற்களில், கீழே சில விளக்கங்கள்!

”ஒரு நாளைக்கு 200 ரூபாய் சம்பாதிக்கிறேன். என்னுடைய, டீ, பீடி செலவு போக, தினம் ஒரு க்வாட்டர் அடிக்க எடுத்துக்கிட்டு மீதி ஐம்பது ரூபாயை பொண்டாட்டி கிட்ட வீட்டு செலவுக்குக் கொடுத்துடுவேன்! இப்ப அரசாங்கம் டாஸ்மாக் மூடிட்டாங்கன்னு வை, கள்ளச்சாராயம் குடிக்கணும். அத குடிச்சா செத்துடுவேன், குடும்பம் நடுத்தெருவுக்கு வந்துடும். இல்லைன்னா நான் சரக்கடிக்க வெளியூர் போகணும், சரக்கு விலையும் அதிகமா இருக்கும், போக்குவரத்து செலவு, சரக்கு செலவு எல்லாம் போயிடுச்சுன்னா, வீட்டுக்கு எப்படி காசு கொடுக்கறது சொல்லு!” எம் குடும்பத்துக்கு காசு கொடுக்கலைன்னா, அவங்க எப்படி சாப்பிடுவாங்க, குடும்பமே நடத்தெருவுக்கு வந்துடும்… இதுக்கு யார் காரணம் – அரசாங்கம் தானே! அதனால கடையை எல்லாம் மூடக்கூடாது, விலையும் ஏத்தக்கூடாது, அப்படி ஏத்துனா, நாங்க போராடறத தவிர வேற வழியே இல்லை! எங்களால சரக்கடிக்காம இருக்க முடியாது”. கோபால்! அவன்கிட்ட வண்டியை விரட்டச் சொல்லு, ஒண்ணாம் நம்பர் கடைக்கு சீக்கிரம் போகணும்!

நடுவில் வேறு ஒரு சரக்கு மாஸ்டர் ஏறிக்கொள்ள, இருவர் மூவரானர்கள்! அந்த மூன்றாமவர் அண்ணா சிலை அருகே இறங்கப் போக, “மூணாம் நம்பர் கடைக்கு போறியா, அங்க சரக்கு நல்லாவே இருக்காது, வா, நம்ம ஒண்ணாம் கடைக்குப் போகலாம்!” கோபால் வண்டியை நேரே சத்திரம் பஸ் ஸ்டாப்ல நிறுத்து! போலாம் ரைட்!  எனக்கே சத்திரம் பேருந்து நிலையம் வந்த போது “ஒண்ணாம் நம்பர் கடைக்கு போறவங்க எல்லாம் இறங்கு!” என்று குரல் கொடுக்கத் தோன்றியது! கஷ்டப்பட்டு அடக்கிக்கொண்டேன்!
    
மீண்டும் ச[சி]ந்திப்போம்…

நட்புடன்

வெங்கட்
புது தில்லி.

47 கருத்துகள்:

  1. ஒண்ணாம் நம்பர் ஏமாளித்தனம்..
    சம்பாதித்ததை இழக்கிறார்களே இப்படி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருத்தம் தான் மிஞ்சுகிறது!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரிஷபன் ஜி!

      நீக்கு
  2. இவர்கள் செய்யும் தவறுகளுக்கும் பதில் வைத்திருப்பார்கள். இவர்களை என்ன செய்ய!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எல்லாவற்றிற்கும் இவர்களிடம் பதில் உண்டு!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  3. பதில்கள்
    1. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

      நீக்கு
    2. வெங்கட் நாகராஜ் has left a new comment on your post "ஒண்ணாம் நம்பர் கடைக்கு சீக்கிரம் போ கோபால்!":

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.

      நீக்கு
  4. இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. KILLERGEE Devakottai has left a new comment on your post "ஒண்ணாம் நம்பர் கடைக்கு சீக்கிரம் போ கோபால்!":

      குடிகாரன் சொல்லும் காரணம் ஆச்சர்யமாக இருக்கிறது இவனுக்கு குடும்ப நினைவும் இருக்கிறதே...

      நீக்கு
  5. இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. துரை செல்வராஜூ has left a new comment on your post "ஒண்ணாம் நம்பர் கடைக்கு சீக்கிரம் போ கோபால்!":

      >>> சரக்கு மாஸ்டர்.. <<<

      இப்படியும் ஒரு அர்த்தம் வருகிறதா..
      திருந்துகின்ற மாதிரி தெரியவில்லை..

      நீக்கு
    2. அவரே நினைத்தால் மட்டுமே திருந்த முடியும்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!

      நீக்கு
  6. இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பி.பிரசாத் has left a new comment on your post "ஒண்ணாம் நம்பர் கடைக்கு சீக்கிரம் போ கோபால்!":

      //ஒண்ணாம் நம்பர் கடைக்கு போ கோபால்! // ஒரு திரைப்படத்திற்கு டைட்டிலும், ஒரு திரைப்பாடலுக்கு பல்லவியும் ரெடி !

      நீக்கு
    2. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பிரசாத்.

      நீக்கு
  7. இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ராஜி has left a new comment on your post "ஒண்ணாம் நம்பர் கடைக்கு சீக்கிரம் போ கோபால்!":

      அந்த இடத்தில் நானாய் இருந்தால் ஒண்ணாம் நம்பர் ஸ்டாப்ன்னு சொல்லி இருப்பேன். இதுலாம் ஒரு ஜாலிண்ணே. அனுபவிக்கனும்.

      நீக்கு
    2. ஜாலி தான்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி!

      நீக்கு
  8. இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கரந்தை ஜெயக்குமார் has left a new comment on your post "ஒண்ணாம் நம்பர் கடைக்கு சீக்கிரம் போ கோபால்!":

      வேதனை ஐயா
      தமிழகம் இப்படியாத் தள்ளாடவேண்டும்

      நீக்கு
    2. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  9. இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பரிவை சே.குமார் has left a new comment on your post "ஒண்ணாம் நம்பர் கடைக்கு சீக்கிரம் போ கோபால்!":

      ஹா.. ஹா...
      ஒண்ணாம் நம்பர் கடை பஸ் ஸ்டாப் ஒண்ணு போட்டுடலாம்.
      அரசுக்கும் நல்ல வருமானம் வரும் இடம்தானே..

      நீக்கு
  10. இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வே.நடனசபாபதி has left a new comment on your post "ஒண்ணாம் நம்பர் கடைக்கு சீக்கிரம் போ கோபால்!":

      200 ரூபாய் சம்பாதித்து 150 ரூபாயை தேநீர்,பீடி, மது போன்றவைகளுக்கு செலவழித்துவிட்டு, வெறும் 50 ரூபாயை மட்டும் வீட்டிற்கு கொடுத்தால் அவரது குடும்பம் எப்படி முன்னேறும்? என்று இந்த குடிப்பழக்கம் ஒழிக்கிறதோ அன்றுதான் இவர்களைப் போன்றோர்களின் குடும்பத்திற்கு விடிவு காலம்,அந்த நாள் வர வேண்டுவோம்.

      நீக்கு
  11. இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Thulasidharan V Thillaiakathu has left a new comment on your post "ஒண்ணாம் நம்பர் கடைக்கு சீக்கிரம் போ கோபால்!":

      சரக்கு மாஸ்டர் என்றால் நல்லதொரு அர்த்தம் முன்பெல்லாம். பல சரக்கு, சரக்கு தூக்குபவர் என்ரு... இப்போது அது இப்படியான குடிக்கு "சரக்கு" அடித்தவன் சரக்கு மாஸ்டர் என்றாகிவிட்டது பாருங்கள் வெங்கட்ஜி!

      நீக்கு
  12. இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. திண்டுக்கல் தனபாலன் has left a new comment on your post "ஒண்ணாம் நம்பர் கடைக்கு சீக்கிரம் போ கோபால்!":

      அடப்பாவிகளா... என்னவொரு விளக்கம்... கொடுமை...

      நீக்கு
  13. இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Bagawanjee KA has left a new comment on your post "ஒண்ணாம் நம்பர் கடைக்கு சீக்கிரம் போ கோபால்!":

      குடிகார மட்டையின் நொண்டிச் சாக்கு :)

      நீக்கு
  14. இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நெல்லைத் தமிழன் has left a new comment on your post "ஒண்ணாம் நம்பர் கடைக்கு சீக்கிரம் போ கோபால்!":

      திரைப்பட டைடில் மாதிரி எழுதிட்டீங்க. இப்போ திருச்சில எல்லாரும் ஒண்ணாம் நம்பர் கடையைத் தேடப் போறாங்க. சரக்கு நல்லா இல்லைனா கண்டனக் கணைகள் உங்களுக்கு வரப்போகுது.

      நீக்கு
  15. இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கோமதி அரசு has left a new comment on your post "ஒண்ணாம் நம்பர் கடைக்கு சீக்கிரம் போ கோபால்!":

      குடும்ப நினைவுடன் இருப்பதை பாராட்ட வேண்டும்.
      நம்மை நம்பி இருக்கும் குடும்பத்திற்கு குடியை விட்டால் மேலும் உதவலாம் என்ற எண்ணம் வந்தால் உடல் நலமும் காப்பற்றபடும், குடும்பமும் நன்றாக இருக்கும்.

      நீக்கு
  16. இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Bhanumathy Venkateswaran has left a new comment on your post "ஒண்ணாம் நம்பர் கடைக்கு சீக்கிரம் போ கோபால்!":

      வர வர டாஸ்மாக் கடைக்களுக்கு முன்னாள் கூட்டம் அதிகமாகிக் கொண்டே போகிறது. அரசுக்கு வருமானம், மக்களுக்கு?

      நீக்கு
  17. இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பூ விழி has left a new comment on your post "ஒண்ணாம் நம்பர் கடைக்கு சீக்கிரம் போ கோபால்!":

      பஸ் பயணத்தில் இப்படியொரு அனுபவம்
      என்ன ஒரு சாமர்த்தியம் பாருங்க சம்பாதித்தை குடும்பத்துக்கு கணக்கு பார்த்து கொடுப்பதில் நாட்டுக்கே பட்ஜெட் போட இவங்கதான் சரி ...

      நீக்கு
  18. இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.

    பதிலளிநீக்கு
  19. இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Geetha Sambasivam has left a new comment on your post "ஒண்ணாம் நம்பர் கடைக்கு சீக்கிரம் போ கோபால்!":

      என்னவோ மனிதர்கள்! குறைந்த பட்சமாகக் குடும்பத்தின் நினைவாவது இருக்கேனு சந்தோஷப் பட வேண்டியது தான்! அந்த ஐம்பது ரூபாயில் எத்தனை பேர் சாப்பிடணுமோ! :( இம்மாதிரிக் குடும்பங்கள் திருந்தி முன்னுக்கு வருவது எப்போது!

      நீக்கு
  20. இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Geetha Sambasivam has left a new comment on your post "ஒண்ணாம் நம்பர் கடைக்கு சீக்கிரம் போ கோபால்!":

      க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், நான் ரோபோ இல்லைனு சொன்னப்புறமாத் தான் கமென்டையே ஏத்துக்கறது! நறநறநற நறநறநற

      நீக்கு
  21. இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. புலவர் இராமாநுசம் has left a new comment on your post "ஒண்ணாம் நம்பர் கடைக்கு சீக்கிரம் போ கோபால்!":

      இனி நாடு திருந்தாது ! மனம் வருந்துகிறது!

      நீக்கு
  22. கருத்துரைத்த அனைவருக்கும் மனம் நிறைந்த நன்றி. என்னுடைய சிறு தவறினால் கருத்துகள் நீக்கப்பட்டன. மின்னஞ்சலில் வந்திருந்தவற்றை மீண்டும் இங்கே சேர்த்து விட்டேன். மதுரைத் தமிழன் அவர்களுடைய கருத்து மட்டும் மின்னஞ்சலுக்கு வராது என்பதால் இங்கே சேர்க்க முடியவில்லை. வருந்துகிறேன்!

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....